Thursday, October 28, 2010

பிஎஸ்என்எல்-ஐ பாதுகாப்போம்

-எஸ்.மோகன்தாஸ்


செல்போன் சேவையில் 1995ஆம் ஆண்டிலேயே தனியார் நிறுவனங்கள் அனு மதிக்கப்பட்டன. அரசுத்துறை நிறுவனமான டிஓடி-யும் பொதுத்துறை நிறுவனமான எம்டி என்எல்-ம் செல்போன்சேவை தருவதற்கான உட்கட்டமைப்பு வசதிகளையும், திறமையான ஊழியர்களையும் கொண்டிருந்தன. ஆனால் அவை செல் சேவையில் ஈடுபட அரசாங்கம் தடை விதித்தது. ஏழு ஆண்டுகள் வரை இந்த தடை நீடித்தது. இந்த 7 ஆண்டுகளில் தனியார் நிறுவனங்கள் தொலைத்தொடர்பு சந் தையில் தங்களை பெருமளவு நிலைநிறுத்திக் கொண்டன. இந்த ஏழு ஆண்டுகளில் தனி யார் நிறுவனங்கள் கட்டண வகையில் அடித்த கொள்ளை சொல்லி மாளாது. 1.10.2000ல் இருந்து டிஓடி பொதுத்துறை நிறுவனமாக, பிஎஸ்என்எல் ஆக மாற்றப்பட்டது. நீதிமன் றம் வரை சென்று போராடி கடைசியாக 2002 ஆம் ஆண்டில்தான் செல்சேவை துவங்குவ தற்கு பிஎஸ்என்எல் அனுமதி பெற்றது. ஏழு ஆண்டுகள் கழித்து சேவையைத் துவங்கினா லும், 3.5 லட்சம் ஊழியர்கள் மற்றும் அதிகாரிக ளின் கடுமையான உழைப்பினாலும், பொதுத் துறை மீது நமது மக்களுக்கு இருக்கிற அசைக்க முடியாத நம்பிக்கையினாலும் பி எஸ்என்எல் மளமளவென்று முன்னேறியது. ஆண்டொன்றுக்கு 25 சதம் வளர்ச்சியைக் கண்டது. 2006ஆம் ஆண்டிலேயே முதல் இடத்தில் இருந்த ஏர்டெல் நிறுவனத்தைத் தொட்டுப் பிடிக்கும் நிலைக்கு முன்னேறி இரண்டாம் இடத்தில் இருந்தது. 2007 மார்ச் மாத வாக்கில் ஏர்டெல் நிறுவனத்தைப் பின் னுக்குத்தள்ளி முதல் இடத்தைப் பிடிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் நடந்த கதையோ அதிர்ச்சியூட்டுவதாக இருந்தது.

தயாநிதி மாறன், தொலைத்தொடர்பு அமைச்சராக இருந்தபோது 45 மில்லியன் புதிய இணைப்புகளுக்கான கருவிகள் வாங்க டெண்டர் விடப்பட்டிருந்தது. பிஎஸ்என்எல்-ஐ முடக்குவதற்காக, நோக்கியா நிறுவனம் டெண்டருக்கு எதிராக வழக்குத் தொடர்ந்தது. வழக்கின் தீர்ப்பு பிஎஸ்என்எல்க்குச் சாதகமா கவே அமைந்தது. எனவே டெண்டர் இறுதி செய்யப்பட்டிருக்க வேண்டும். இடையில் குடும்பச் சண்டை காரணமாக தயாநிதி மாறன் அமைச்சர் பதவியிலிருந்து வெளியேற்றப் பட்டு, ஆ.ராசா அமைச்சராக்கப்பட்டார். தயா நிதி மாறன் போட்ட டெண்டரை ரத்து செய்வ தாகவும் புதிய டெண்டர் விடப்போவதாகவும் அறிவித்தார். கருவிகள் வாங்க முடியாமல், புதிய இணைப்புகள் தர முடியாமல் பிஎஸ் என்எல் தத்தளிக்க விடப்பட்டது. இந்த இடைவெளியைப் பயன்படுத்தி தனியார் நிறு வனங்கள் வேகவேகமாக முன்னேறின. இரண்டாம் இடத்திலிருந்து முதலிடத்தைப் பிடித்திருக்க வேண்டிய பிஎஸ்என்எல், திட் டமிட்டுச் செய்யப்பட்ட சதி மற்றும் துரோகம் காரணமாக நான்காம் இடத்துக்குத் தள்ளப்பட்டது.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நடந்த இரண்டாம் தலைமுறை (2ஜி) ஸ்பெக்ட்ரம் விற்பனையில் வழக்கமாகப் பின்பற்றப்பட வேண்டிய ஏலம் விடும் நடைமுறை பின்பற் றப்படவில்லை. அமைச்சர் ராசாவினால் ‘முதலில் வந்தவர்களுக்கு முதலில் விற்ப னை’ என்ற புதிய முறை பின்பற்றப்பட்டது. இதனால் ஒரு லட்சம் கோடி ரூபாய் வரை பிஎஸ்என்எல்க்கு இழப்பு ஏற்பட்டது. இந்த ஸ்பெக்ட்ரம் விற்பனையில் கடுமையான முறைகேடுகளும் ஊழலும் நடந்திருப்பதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின. அப்போது முதன்மை ஊழல் கண்காணிப்பு ஆணைய ராக இருந்த பிரத்யூஷ் சின்கா, இந்த ஊழல் தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட் டார். இதையொட்டி சிபிஐ, சஞ்சார் பவனில் சோதனையும் நடத்தியது. தலைமை தணிக் கை அதிகாரி, தொலைத்தொடர்பு அமைச்ச கம் எடுத்த முடிவுகள் மீது எழுப்பியுள்ள கேள் விகள், முறைகேடுகள் நடந்துள்ளதை உறு திப்படுத்துகின்றன. நல்ல லாபத்திற்கு விற் கப்பட்டிருக்க வேண்டிய 2ஜி ஸ்பெக்ட்ரம், அடிமாட்டு விலைக்கு விற்கப்பட்டுள்ளது அம்பலமாகியுள்ளது.

2010ஆம் ஆண்டில் பிஎஸ்என்எல் விரி வாக்கத்துக்காக 93 மில்லியன் இணைப்பு களுக்கான டெண்டர் விடப்பட்டிருந்தது. இந்த முறை மோட்டோரோலா நிறுவனம் வழக்குத் தொடுத்தது. போதாக்குறைக்கு பிரத மர் மன்மோகன்சிங் தனது தொலைத்தொடர்பு ஆலோசகர் சாம்பிட்ரோடா தலைமையில் அமைத்திருந்த கமிட்டி, இந்த டெண்டரை ஒட்டுமொத்தமாக ரத்து செய்யவும், ஒரு லட் சம் ஊழியர்களை விருப்ப ஓய்வில் அனுப்ப வும், பிஎஸ்என்எல்-ன் 20 சதவீத பங்கு களை விற்பனை செய்யவும் பரிந்துரை செய் தது. இந்தப் பரிந்துரைகள் மத்திய அரசாங்கத் தின் நோக்கங்களை தோலுரித்துக் காட்டின.

இதற்கிடையில் 3ஜி ஸ்பெக்ட்ரம் கட்ட ணம் என்ற பெயரில் பிஎஸ்என்எல் நிறுவனத் திடமிருந்து 18,500 கோடி ரூபாயை அதாவது பிஎஸ்என்எல் வசம் இருந்த உபரி நிதி முழு வதையும் அரசாங்கம் பறித்துக் கொண்டுள்ளது. எந்த ஒரு தனியார் நிறுவனமும் இவ்வளவு பெரிய தொகையைக் கட்டவில்லை. ஆனால் மத்திய அரசாங்கத்தின் சமூக, பொருளாதாரக் கடமைகளை அர்ப்பணிப்பு உணர்வோடு செயல்படுத்தும் பிஎஸ்என்எல் நிறுவனத் துக்கு ஸ்பெக்ட்ரம் கட்டணத்திலிருந்து விலக்கு அளிப்பதற்குப் பதிலாக, கடுமையாக நிர்ப்பந் தித்து அதன் கையிருப்பு நிதி முழுவதையும் அபகரித்துக்கொண்டு ஒரு திவால் நிலைக்கு அரசாங்கம் தள்ளிவிட்டுள்ளது.

கடந்த 20 வருடங்களாக மத்தியில் ஆட் சிக்கு வந்த அனைத்து அரசாங்கங்களும் விடாப்பிடியாகப் கடைப்பிடித்து வரும் தனி யார்மய, தாராளமய, உலகமயப் பொருளாதாரக் கொள்கையின் விளைவாகவே பொதுத்துறை நிறுவனங்களும், பிஎஸ்என்எல்-ம் குறி வைத்துத் தாக்கப்படுகின்றன. இந்தப் புதிய பொருளாதாரக் கொள்கையின் விளைவாகவே ஓய்வூதியமும், ஓய்வூதியர் நலன்களும் புதிய புதிய தாக்குதல்களுக்கு உள்ளாகின்றன. ஓய் வூதியம் என்பது அரசாங்கம் கருணையினால் வழங்கும் சலுகை அல்ல. சமூகப் பாதுகாப்பு ஏற்பாட்டின் ஒரு அம்சம் என்ற முறையில் ஓய்வூதியம் ஒரு அடிப்படை உரிமையாகும்.

அரசு ஊழியர்களின் பென்சன், சிசிஎஸ் (பென்சன் ரூல்ஸ்) 1972ன் படி நிர்வகிக்கப்படு கிறது. பிஎஸ்என்எல் ஊழியர்களுக்கு 1972 பென்சன் விதிகளில் 37ஏ பிரிவு இணைக்கப் பட்டு பென்சன் வழங்கப்படுகிறது. இடை யில் பாஜக அரசாங்கம் 1.1.2004க்குப் பிறகு பணியில் சேருபவர்களுக்கு ஒரு புதிய பென் சன் திட்டத்தைக் கொண்டு வந்துவிட்டது. 1972 பென்சன் விதிகளின் பாதுகாப்பு அம்சங் கள் புதிய பென்சன் திட்டத்தில் இல்லை. 1972 பென்சன் விதிகளின்படி பென்சனுக்கு அரசு வழங்கியுள்ள உத்தரவாதம் புது பென் சன் திட்டத்துக்கு இல்லை. புதிய திட்டத்தின் படி ஊழியர்கள் தங்களது சம்பளத்தில் ஒரு பகுதியை பென்சனுக்காக மாதா மாதம் செலுத்த வேண்டும். அதற்கு இணையான தொகையை அரசாங்கமும் வழங்கும். இவ் வாறு சேரும் பென்சன் நிதி, தனியார் பென்சன் நிதிக் கம்பெனிகளிடம் அவர்கள் நிர்வாகத் தில் விடப்படும். இந்த பென்சன் நிதிக் கம்பெ னிகள் கொழுத்த லாபம் ஈட்டும் ஆசையில் ஊழியர்களின் பென்சன் நிதியை பங்குச் சந் தையில் முதலீடு செய்யும். அதில் கிடைக் கும் லாபத்திலிருந்து பென்சன் வழங்கப்படும். எனவே ஊழியர்களின் பென்சன், பங்குச்சந் தையின் ஏற்ற இறக்கத்துக்கு ஏற்றாற்போல் ஊசலாடிக் கொண்டே இருக்கும். சமீபத்தில் அமெரிக்காவில் இத்தகைய பென்சன் நிதிக் கம்பெனிகள் திவாலாகிவிட்டன. எனவே ஓய்வூதியர்கள் தெருவில் நிற்கும் நிலை ஏற்பட்டது.

ஐ.மு.கூட்டணி -1 அரசாங்கம் பிஎப்ஆர் டிஏ (ஞநளேiடிn குரனே சுநபரடயவடிசல யனே னுநஎநடடியீஅநவே ஹரவாடிசவைல) சட்டத்திற்கான சட்ட முன்வரைவைக் கொண்டு வந்தது. மார்க்சிஸ்ட் கட்சியும், இடதுசாரிக் கட்சிகளும் இந்த சட்ட முன் வரைவைக் கடுமையாக எதிர்த்தன. இடது சாரிக் கட்சிகளின் ஆதரவோடுதான் அந்த அரசாங்கம் நிலைத்திருக்க முடியும் என்ப தால் அந்த சட்ட முன்வரைவு கிடப்பில் போடப்பட்டது. 15வது நாடாளுமன்றத் தேர்த லின் முடிவில் இந்த நிலைமை மாறியது. இடதுசாரிக்கட்சிகளின் ஆதரவு தேவையில் லாமலேயே புதிய ஐ.மு.கூட்டணி-2 அரசாங் கம் அமையும் வாய்ப்பு ஏற்பட்டது. இந்தச் சூழ் நிலையைப் பயன்படுத்தி “பென்சன் சீர்திருத்த” நடவடிக்கைகளைச் செயல்படுத்த மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசாங்கம் தீவிரமான முயற்சியில் இறங்கியுள்ளது. பென்சன் நிதி முறைப்படுத்துதல் மற்றும் வளர்ச்சிக்கான ஆணையம் உருவாக்குவதன் நோக்கம், மத்திய அரசின் கைகளில் பாதுகாப்பாக இருக்கும் பென்சன் நிதியை தனியார்மய மாக்குவதைத் தவிர வேறொன்றுமல்ல.

6வது ஊதியக்குழு, தொலைத்தொடர்பில் 1 லட்சத்து 47 ஆயிரம் ஓய்வூதியர்கள் இருப் பதாக தனது அறிக்கையில் குறிப்பிட்டிருந் தது. இன்று அது இன்னும் அதிகமாகியிருக்கும். நாடு முழுவதும் பல்வேறு சிறிய சிறிய அமைப் புகளில் சிதறிக்கிடக்கும் ஓய்வூதியர்களை ஒரு வலுவான அகில இந்திய அமைப்பின் கீழ் ஒன்றுதிரட்ட வேண்டிய வரலாற்று ரீதி யான தேவை ஏற்பட்டுள்ளது. எனவேதான் பிஎஸ்என்எல் ஊழியர் சங்கம் இந்த கடமை யை நிறைவேற்றுவதற்காக 21.10.2009ல் ஓய்வூதியர் அகில இந்திய கருத்தரங்கை தில் லியில் நடத்தியது. 21 மாநிலங்களிலிருந்து பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். சிஐடியு தலைவர் எம்.கே.பாந்தே கருத்தரங்கைத் துவக்கி வைத்து உரையாற்றினார். பிரதிநிதி களின் பலத்த கரவொலிக்கிடையே ‘அகில இந்திய பிஎஸ்என்எல்-டாட் ஓய்வூதியர் சங்கம்’ (ஏஐபிடிபிஏ) என்ற புதிய அமைப்பு உருவாக்கப்பட்டது.

தமிழகத்தில் டிசம்பர் 2009ல் மாநில அமைப்பு ஏற்படுத்தப்பட்டு திறம்பட செயல் பட்டு வருகிறது. வலுவான மாவட்டச் சங்கங் கள் உருவாகி நல்ல முறையில் செயல்பட்டு வருகின்றன. இந்தப் பின்னணியில் தமிழ் மாநில துவக்க மாநாடு 31.10.2010ல் கோவை யில் நடைபெறவுள்ளது. கோவை நாடாளு மன்ற உறுப்பினர் பி.ஆர். நடராஜனை தலை வராகக் கொண்ட வரவேற்புக்குழு சிறப்பான ஏற்பாடுகளைச் செய்து வருகிறது.

தமிழகத்தில் டிஒடி மற்றும் பிஎஸ்என் எல் ஓய்வூதியர்களைத் திரட்டும் பணியில், அவர்களின் நலன்களைக் காத்து நிற்கும் போராட்டங்களில் ஏஐபிடிபிஏ தமிழ் மாநில மாநாடு ஒரு மைல்கல்லாக அமையும் என்ப தில் சந்தேகமில்லை.

கட்டுரையாளர், அகில இந்திய துணைத்தலைவர், ஏஐபிடிபிஏ

நன்றி : "தீக்கதிர்"